வளாக நேர்காணல் மூலம் 97% பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது: ராஜலட்சுமி தொழில்நுட்ப கல்லூரி தகவல்

சென்னை: வளாக நேர்க்காணல் மூலம் ஒவ்வோர் ஆண்டும் 97% பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் கல்லூரியாக திகழ்ந்து நிற்பதாக ராஜலட்சுமி தொழில்நுட்பக் கல்லூரி துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

ராஜலட்சுமி தொழில்நுட்பக் கல்லூரி துணைத் தலைவர் ஹரி சங்கர் மேகநாதன் கூறியதாவது:
மாணவர்கள் பலரும் ஆர்வமுடன் வந்து தங்களுக்கான படிப்பு மற்றும் அதன் எதிர்காலத்தை பற்றி கேட்டு அறிந்துகொள்கின்றனர். மாணவர்கள் பலரும் செய்தித்தாள்கள் படிப்பதை வழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். எங்கள் கல்லூரியை பொருத்தவரை மாணவர்கள் தங்கும் விடுதிகளில் கூட செய்தித் தாள்கள் படிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளோம். ஏனென்றால் சில யூடியூப் ஊடகங்கள் தவறான செய்திகளை நிமிடத்தில் பகிர்ந்து விடுகிறார்கள். ஆனால் செய்தி தாள்கள் அப்படி கிடையாது. பொறுமையாக உண்மை நிலையை கண்டறிந்து மக்களுக்கு கொடுக்கின்றனர். அப்படி ஒரு நாளிதழாகத் தான் தினகரன் உள்ளது.

அவர்கள் இந்தக் கண்காட்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் கல்லூரியை பொருத்தவரை இந்திய மாணவர்கள் மட்டுமல்லாமல், சர்வதேச மாணவர்களும் படித்து வருகிறார்கள். இதனால் சர்வதேச அளவிலான பாடத்திட்டம் மாணவர்கள் அனைவருக்கும் கற்று கொடுக்கப்படுகிறது. மாணவர்களுக்கு படிப்பு மட்டுமல்லாமல் தொழிற் பயிற்சியும் சேர்த்து வழங்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு வருடமும் 97% பேர் வளாக நேர்காணலில் வேலை வாய்ப்பை பெறுகின்றனர்.

அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் 100% சீட்டுகளும் நிரம்பி விடுகிறது. மேலும் எங்கள் மாணவர்களுக்கு நாங்களே இன்டெர்ன்ஷிப் வாங்கி கொடுத்து விடுவோம். இது அவர்களின் வேலை வாய்ப்புக்கு மிகவும் அவசியமாகும். மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் எங்கள் கல்லூரி நிர்வாகம் வழங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் மோதல்: நெருக்கடியில் ருதுராஜ் & கோ

இத்தாலி ஓபன் 4வது சுற்றில் இகா

சில்லி பாயின்ட்…