சித்தூர் உட்பட 4 மாவட்டங்களில் உள்ள என்சிசி மாணவர்களுக்கு 10 நாள் ராணுவ பயிற்சி-ராணுவ பட்டாலியன் அளித்தார்

சித்தூர் : சித்தூர் உட்பட 4 மாவட்டங்களில் உள்ள என்சிசி மாணவர்களுக்கு ராணுவ பயிற்சி ராணுவ பட்டாலியன் அளித்து வருகிறார். இந்த பயிற்சி வரும் 17ம் தேதி வரை நடக்கிறது.
சித்தூர் மாவட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரி என்சிசி மாணவர்களுக்கு 10 நாட்கள் ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி சித்தூர் மாவட்டத்தில் சித்தூர் மாவட்டம், நெல்லூர், அனந்தபுர், கர்னுல் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரிகளில் படிக்கும் என்சிசி மாணவர்களுக்கு சித்தூர் பிவிகே என் அரசு கல்லூரியில் 35வது ராணுவ பெட்டாலியன் கர்னல் ரமேஷ் தலைமையில் பயிற்சி கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராணுவ பயிற்சி தொடங்கியது. இதில் 35வது ராணுவ பெட்டாலியன் கர்னல் ரமேஷ் மாணவர்களுக்கு மலை ஏறுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல், துப்பாக்கி சுடுதல், யோகா நடை பயிற்சி, ஓட்டப்பந்தயம், லாங் ஜம்பு, ஹைட் ஜம்பு மற்றும் சீருடை அணிவகுப்பு ஆகிய பயிற்சிகள் வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு என்சிசி பயிற்சி வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் என்சிசி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில் என்சிசி மாணவர்களுக்கு மலை ஏறுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல், துப்பாக்கி சுடுதல், யோகா நடை பயிற்சி, ஓட்டப்பந்தயம், லாங் ஜம்பு, ஹைட் ஜம்பு மற்றும் சீருடை அணிவகுப்பு உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.

என்சிசி மாணவர்களுக்கு இதுபோன்ற பயிற்சிகள் வழங்கப்படுவதால் எதிர்காலத்தில் அவர்களின் உடல் ஆரோக்கியமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும். அதே போல் ராணுவத்தில் பணியில் சேரும்போது அவர்களுக்கு மிகவும் பயிற்சி எளிதாக இருக்கும். அதேபோல் என்சிசி மாணவர்களுக்கு ஒழுக்கம் குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.

அதேபோல் அதிகாரிகளுக்கு எவ்வாறு மரியாதை செலுத்த வேண்டும். பொது மக்களுக்கு எவ்வாறு மரியாதை செலுத்த வேண்டும். முதியோர்களிடம் எவ்வாறு பழக வேண்டும் மற்றும் மாணவ மாணவிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என அனைத்து பயிற்சிகளும் வழங்கி வருகிறோம். துப்பாக்கி சுடுதல் போட்டியில் சிறப்பாக துப்பாக்கிச் சுடும் என்சிசி மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

அதேபோல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் போட்டி சான்றிதழ்களும் வழங்கப்படும். மொத்தம் 10 நாட்கள் என்சிசி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. பின்னர் அவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். இந்த 10 நாட்களும் என்சிசி மாணவர்களுக்கு தங்கும் இடம், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் 35வது பெட்டாலியன் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த வாரம் பயிற்சி நிறைவு பெறுகிறது.

இவ்வாறு அவர் பேசினார். இதில் என்சிசி மாஸ்டர் சந்திரசேகர் உள்பட ஏராளமான ராணுவ அதிகாரிகள் மற்றும் என்சிசி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி 17ம் தேதி முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தேனி கொடுவிலார்ப்பட்டியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞர் கைது..!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மழை!

கோயில் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு