திருவாரூர் அருகே காட்டூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவாரூர்: திருவாரூர் அருகே காட்டூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்து வருகிறார். நாளை நடைபெறும் விழாவில் கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார். திறப்பு விழாவிற்கான முன்னேற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். 7,000 சதுர அடியில் 12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் நாளை திறக்கப்படுகிறது. முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைக்கிறார். கலைஞர் கோட்டத்தில் அமைந்துள்ள கலைஞர் முழு உருவ சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

திருவாரூரில் நாளை நடைபெறும் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் கலந்து கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு திருவாரூர் சென்றார். திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடி மதிப்பில் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதில் கலைஞர் சிலையை திறந்து வைக்கிறார்.

இவ்விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்றிரவு விமானம் மூலம் திருச்சி வந்தார். அங்கிருந்து கார் மூலம் தஞ்சை வழியாக திருவாரூர் சென்று இரவு சன்னதி தெரு இல்லத்தில் ஓய்வெடுத்தார். இன்று விழா நடைபெறும் இடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். நாளை 20ம் தேதி விழாவில் கலந்துகொள்ளும் முதல்வர் இரவு 11 மணியளவில் ரயில் மூலம் திருவாரூரில் இருந்து சென்னை புறப்படுவார் என்று தெரிவித்துள்ளனர்.

கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் இருவரும் நாளை பீகாரிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகின்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூருக்கு மதியம் 3 மணியளவில் வருகின்றனர்.

Related posts

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

7 நாளுக்குப்பின் தொட்டபெட்டா சிகரத்தை ரசித்த சுற்றுலா பயணிகள்

தேசிய வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.7.5 கோடி மோசடி: மேலாளர் உட்பட 3 பேர் கைது