சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்பான சிறப்பு சோதனை: 20 குற்றவாளிகள் கைது

சென்னை: சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கடந்த 7 நாட்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்பான சிறப்பு சோதனையில், 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 20 கிலோ 990 கிராம் கஞ்சா, 550 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 02 செல்போன்கள், மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 26.05.2023 முதல் 01.06.2023 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 குற்றவாளிகள் கைது. 20 கிலோ 990 கிராம் கஞ்சா, 550 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 02 செல்போன்கள், மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் குறிப்பிடும்படியாக, V-4 இராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 30.05.2023 அன்று வில்லிவாக்கம், மார்கெட் அருகில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 1.கிரண்குமார், வ/24, த/பெ.மோகன், எண்.3/59, கடப்பாரோடு, திருவள்ளுவர் நகர், லட்சுமிபுரம், கொளத்தூர், சென்னை 2.சித்திக், வ/49, த/பெ.உமர், எண்.39, கண்ணையா தெரு, அம்பத்தூர், சென்னை என்பவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் எதிரி கிரண்குமார் மீது ஏற்கனவே 3 கஞ்சா வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

S-8 ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 30.05.2023 ஆதம்பாக்கம், பெரியார் நகர் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா மற்றும் டைடால் வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த 1.உதயகுமார், வ/25, த/பெ.உத்தண்டி, டாக்டர் அம்பேத்கர் நகர், சென்னை 2.இளங்கோ, வ/24, த/பெ.ராஜா, பரமேஸ்வரன் நகர் முதல் தெரு, ஆதம்பாக்கம், சென்னை 3.செந்தில்குமார், வ/24, த/பெ.உத்தண்டி, டாக்டர் அம்பேத்கர் நகர், சென்னை 4.மணிகண்டன், வ/24, த/பெ.ராஜா, மேடவாக்கம், சென்னை ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா மற்றும் 550 டைடால் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
C-1 பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (01.06.2023) தேவராஜ் முதலி தெரு பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 1.சரவணன், வ/37, த/பெ.செல்லப்பன், எண்.51, மூலக்கொத்தளம், சென்னை 2.கோபி, வ/52, த/பெ.மனோகர், அன்னை சத்யா நகர், சென்னை என்பவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

S-8 ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (01.06.2023) ஆதம்பாக்கம், நேதாஜி ரோட்டில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த மஞ்சுளா, வ/43, க/பெ.செல்வம், டாக்டர் அம்பேத்கர் நகர், ஆதம்பாக்கம், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சென்னை காவல் ஆணையாளரின் உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், காவல் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய காவல் குழுவினர், தீவிர விசாரணை மற்றும் தனிக்கவனம் செலுத்தி கடந்த 2021ம் ஆண்டு முதல் நடப்பாண்டு இதுவரையில், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 699 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1,567 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, சட்டரீதியாக முடக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு இதுவரையில் மொத்தம் 821 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

போரெல், ஸ்டப்ஸ் அதிரடி அரை சதம் லக்னோவை வீழ்த்தியது டெல்லி

சிறுமியின் காதலை கண்டித்த தாயின் காதலன் கொலை: வயிற்றில் சொருகிய கத்தியை பிடுங்கி பதிலுக்கு வெட்டியதில் வாலிபர் சீரியஸ்

சேலம் பெண்கள் சிறையில் முதன்முறையாக பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற பெண் கைதி: பரிசு வழங்கி அதிகாரிகள் பாராட்டு