சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!!

சென்னை: சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவையில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில் சிங்கப்பெருமாள்கோவில் வரை இயக்கப்படும். சிங்கபெருமாள்கோவில் – செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 9.30 மணி, 10.56, 11.40, 12.40 மணிக்கு கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் செங்கல்பட்டுக்கு பதில் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து கடற்கரைக்கு ரயில் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

டி20 உலகக்கோப்பை லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது