சிபிஐ பிடியில் சிக்கிய காஷ்மீர் அதிகாரி

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரை சேர்ந்த தோட்டக்கலை அதிகாரி, தன்னுடன் பணிபுரியும் ஜூனியர் ஊழியர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்டவற்றை பெற்றுதருவதாக கூறி ரூ.10லட்சம் லஞ்சமாக பெற்றுள்ளார். இது குறித்த புகாரின்பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைக்கு பின் லஞ்சம் பெற்ற அதிகாரி சரப்ஜித் சிங் மற்றும் இடைத்தரகர் கோஹர் அகமது தர் ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது.இருவரது வீட்டிலும் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.3.5லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி வழங்கப்படும்: மக்கள் நல்வாழ்வுத்துறை

கனகம்மாசத்திரம் சாலையில் வேரோடு பெயர்ந்து விழுந்த நூறாண்டு புளியமரம்: உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்

திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் செய்த 750 பக்தர்களுக்கு மஞ்சப்பை