வரதட்சணை வாங்கும் மணமகனின் பட்டப்படிப்பு சான்றிதழ் ரத்து: தெலங்கானா அரசு புதிய திட்டம்

திருமலை: வரதட்சணை கொடுமையை தடுக்க, கல்லூரியில் பயின்று பெற்ற பட்டப்படிப்பு சான்றை ரத்து செய்யும் நடவடிக்கைக்கு தெலங்கானா மாநில அரசு திட்டமிட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் கொலை அல்லது தற்கொலை சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தெலங்கானாவில் வரதட்சணை பிரச்னையால் கடைசி நிமிடத்தில் திருமணம் ரத்தான சம்பவங்கள் அரங்கேறி உள்ளது. இதனை தடுக்கும் வகையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் சட்ட வல்லுநர்களுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக வரதட்சணை கொடுமைகளை தடுக்கும் வகையில் கல்லூரி பருவத்திலேயே மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதாவது பள்ளி பருவம் முடிந்து புதிதாக கல்லூரியில் முதலாமாண்டு சேரும் மாணவர்கள் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும். அதில், ‘எனது திருமணத்தின் போது வரதட்சணை வாங்க மாட்டேன். வரதட்சணை என்பது சட்டப்படி குற்றம். அவ்வாறு நான் வரதட்சணை பெற்றால் என் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்’ என குறிப்பிடப்பட்டிருக்கும். அதை மீறி எதிர்காலத்தில் வரதட்சணை பெற்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது ெதரியவந்தால், சம்பந்தப்பட்ட மாணவரின் பட்டப்படிப்பு சான்றிதழ் ரத்து செய்யப்படும் வகையில் தெலங்கானா அரசு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.

Related posts

தனியார் பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

போதைப்பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!