ஒருமுறை பட்டனை அழுத்தினால் பா.ஜ.க.வுக்கு 2 ஓட்டுகள் பதிவான விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஒரு முறை பட்டனை அழுத்தினால் பா.ஜ.க.வுக்கு 2 ஓட்டுகள் பதிவான விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒப்புகைச்சீட்டு 100 சதவீதம் எண்ணக்கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தபோது பா.ஜ.க.வுக்கு 2 ஓட்டுகள் பதிவாவது குறித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் முறையிட்டார். மேலும், வாக்கு இயந்திரங்களை கையாளும் பொறியாளர்கள், தேர்தல் ஆணையத்துக்கு கட்டுப்படாதவர்கள் என்பதால் தில்லு முல்லு நடக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். தில்லுமுல்லு நடைபெறும் என்ற அச்சம் மட்டுமே உள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிசுவின் பாலினம் குறித்த வீடியோவை யூடியூபிலிருந்து நீக்கிவிட்டதாக யூடியூபர் இர்ஃபான் விளக்கம்!

விமானம் நடுவானில் மேகக் கூட்டத்தில் உரசியதால் ஏற்பட்ட விபத்து பற்றி பரபரப்பு தகவல்!

சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் CMDA திட்டம்: தடை விதித்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு