பாஜக அரசின் தோல்வியை மறைக்கவே அயோத்தியில் பிரமாண்ட விழா.. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் சமூக நீதி அழியும் ஆபத்து: திருமாவளவன் விமர்சனம்!!

சென்னை: கடந்த 10 ஆண்டு கால பாஜக அரசின் தோல்வியை மறைக்கவே அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட விழா எடுக்கப்பட்டுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது;

கடந்த 10 ஆண்டு கால பாஜக அரசின் தோல்வியை மறைக்கவே அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட விழா எடுக்கப்பட்டுள்ளதாகவும், வருணாசிரமத்தை நிலைநாட்டவே மோடியும் அமித்ஷாவும் பாடுபட்டு வருவதாகவும் திருமாவளவன் குற்றச்சாட்டியுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்எஸ்எஸ் ரவியாகவே செயல்படுவதாக திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். மோடியின் 10 ஆண்டு ஆட்சியால் ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

மோடி ஆட்சியின் தோல்வியில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அயோத்தியில் பிரமாண்ட விழா நடத்தப்பட்டுள்ளது. இப்படிப்பட்டவர்களின் ஆட்சி தொடர்ந்து நீடித்தால் தொழிலதிபர்கள் மட்டுமே வலிமை பெற முடியும். மோடி ஆட்சியை அப்புறப்படுத்துவது நாட்டின் மிக முக்கிய தேவையாக இருக்கிறது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமூக நீதி அழியும் ஆபத்து உள்ளது. என்று அவர் கூறியுள்ளார்.

Related posts

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா அவசர ஆலோசனை!

பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு அவரது தாத்தா தேவகவுடா எச்சரிக்கை

சமத்துவ இந்தியா உருவாக I.N.D.I.A.கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் : சோனியா காந்தி பேச்சு