பரதநாட்டியம் ஆடியபடி திருப்பதி மலையேறிய சமஸ்கிருத ஆசிரியர்: வெறும் 75 நிமிடங்களுக்குள்ளாக மலையேறி அசத்தல்

ஆந்திரா: சமஸ்கிருத ஆசிரியர் ஒருவர் பரதநாட்டியம் ஆடிக்கொண்டே திருப்பதி மலையில் ஏறி ஏழுமலையானை தரிசனம் செய்தார். திருப்தியிலிருந்து திருமலைக்கு பாதையாத்திரையாக சென்றவர்களில் அடிமேல் அடிவைத்து நிதானமாக நடந்து சென்றவர்கள், ஓட்டமும், நடையுமாக சென்றவர்கள், முழங்காலில் படியேறி சென்றவர்கள் என்று பலர் இருக்கின்றனர்.

ஆனால் ஆந்திர மாநிலம் பல்நாட்டை சேர்ந்த சமஸ்கிருத ஆசிரியர் கிஷ்ணாராவ் பாதையாத்திரையாக செல்ல பக்தர்கள் பயன்படுத்தும் ஸ்ரீவாரிமெட்டு படிக்கட்டுகள் வழியாக பரதநாட்டியம் ஆடிக்கொண்டே மலையேறி சென்று ஏழுமலையானை வழிபட்டுள்ளார்.

இவ்வழியே மலையேற சாதாரணமாக 2 மணி நேரமாவது பிடிக்கும் நிலையில் இவர் பரதநாட்டியம் ஆடியபடி வெறும் 75 நிமிடங்களுக்குள்ளாக ஏறினார். பக்தி தத்துவம் இந்திய கலைகள் நம் கலாச்சாரம் ஆகியவை குறித்த விழிப்புணர்வை இளைஞர்களிடம் ஏற்படுத்துவதற்காக பரதநாட்டியம் ஆடிக்கொண்டே மலையேறி சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

வேங்கைவயல் சம்பவம்: குற்றவாளிகளை கைது செய்ய மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

மெக்சிகோவில் தேர்தல் பிரச்சார மேடை சரிந்து விழுந்து விபத்து: 9 பேர் உயிரிழப்பு!

3 மனைவிகளுக்கு தெரியாமல் 4வது திருமணம் செய்ய முயன்ற கல்யாண மன்னன் பிடிபட்டார்: கோயிலில் போலீசார் சுற்றிவளைத்தனர்