தனியார் வங்கி மேலாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே தனியார் வங்கி மேலாளரை தாக்கிய பாஜக மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் அபிலாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மணவாளநகர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் இணைந்த ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க அபிலாஷ் சென்றுள்ளார். ஏடிஎம் கார்டை மிஷினில் செலுத்திய அபிலாஷிடம் சர்வீஸ் வேலை நடந்து வருகிறது பணம் எடுக்க கூடாது என ஊழியர் கூறியுள்ளார். ஊழியர் சொன்னதை மீறி ஏடிஎம் கார்டை மிஷினில் செலுத்திய அபிலாஷிடம் வங்கி உதவி மேலாளர் பிரதீப் பேசியுள்ளார். தட்டிக் கேட்ட வங்கி உதவி மேலாளர் பிரதீப்பை பாஜக நிர்வாகி அபிலாஷ் கடுமையாக திட்டி தாக்கியுள்ளார். பிரதீப் அளித்த புகாரை அடுத்து பாஜக நிர்வாகி அபிலாஷை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவே அதிமுக தேர்தல் புறக்கணிப்பு: ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு திமுக கண்டனம்

போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜரானார் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா