விமான நிலையத்தில் வங்கதேச முதியவர் சாவு

தாம்பரம்: வங்கதேசத்தை சேர்ந்தவர் அலிம் உட்டின் (65). புற்று நோயாளியான இவர் மருத்துவ சிகிச்சைக்காக தனது மகன்கள் முகமது மகியுதீன், முகமது அப்சர்ருதீன் ஆகியோருடன் சில தினங்களுக்கு முன், வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனைக்கு வந்து, தொடர் சிகிச்சை பெற்றார். அங்கிருந்து நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், கொல்கத்தா வழியாக வங்கதேச தலைநகர் டாக்கா செல்வதற்காக அவர்கள் வந்தனர்.

விமானத்தில் ஏறுவதற்காக உள்ளே சென்றனர். அப்போது, திடீரென அலிம் உட்டின் மயங்கி விழுந்தார். பதற்றமடைந்த மகன்கள் விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அலிம் உட்டினை பரிசோதித்த மருத்துவர்கள், ‘அவர் ஏற்கனவே கடுமையான மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார்’ என்று தெரிவித்தனர்.

Related posts

நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி போலீசார் இன்று சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல்!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல முயற்சிப்பேன்: பாய்மரப்படகு போட்டி வீராங்கனை நேத்ரா குமணன் நம்பிக்கை

கோவை அருகே உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் ஆலையில் அமோனியா வாயு கசிவு: 2 கிலோ மீட்டர் தொலைவில் வசித்த மக்கள் வெளியேற்றம்