முதல் உலகப்போரில் பங்கேற்ற இந்திய வீரர்கள் ஓவியம் ஏற்றுமதி செய்ய தடை: இங்கிலாந்து அரசு நடவடிக்கை

லண்டன்: முதல் உலகப் போரில் சண்டையிட்ட இந்திய வீரர்களின் ஓவியத்தை ஏற்றுமதி செய்ய இங்கிலாந்து அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. முதல் உலகப் போரில் ஏறக்குறைய 15 லட்சம் இந்திய ராணுவத்தினர் இங்கிலாந்து அரசு சார்பில் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் இந்திய ராணுவத்தின் குதிரைப்படை தளபதிகளான ஜகத் சிங், மான் சிங் பிரான்சுக்கு அனுப்பப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு லண்டனில் இருந்த போது ஆங்கிலோ-ஹங்கேரிய ஓவியர் பிலிப் டி லாஸ்லோ அவர்களை ஓவியம் வரைந்தார்.

இந்த ஓவியம் அவரது சொந்த சேகரிப்புக்காக வரையப்பட்டதால் 1937ம் ஆண்டு அவர் இறக்கும் வரை அவரது ஸ்டுடியோவில் இருந்தது. இந்த அற்புதமான படைப்பு இங்கிலாந்தை விட்டு வெளியேறுவதைத் தடுக்க அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இதன் மதிப்பு ₹6.60 லட்சம் கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.

Related posts

மே-19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

பலாப்பழத்தை பறிக்க மரத்தை முட்டியபோது மின்கம்பி அறுந்து விழுந்து காட்டு யானை பலி

கோடை மழை கொட்டியும் நீர்வரத்து குறைவு; பெரியாறு அணைக்கு வரும் நீரை திசை மாற்றுகிறதா கேரளா?; தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டு