அட்டோ 3 எலக்ட்ரிக் கார்

சீனாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமான பிஒய்டி, அட்டோ 3 என்ற எலக்ட்ரிக் காரின் பேஸ்லிப்ட் மாடலை சர்வதேச சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்திருந்தது. இந்த நிறுவனம் இந்தியாவில் சந்தைப்படுத்தியிருந்த சீல் செடான் காரின் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களையும் கொண்டுள்ளது. வெளிப்புறத் தோற்றத்தில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. இருப்பினும், புதிதாக காஸ்மோஸ் பிளாக் வண்ணத்தில் வெளிவந்துள்ளது. இதற்கு அழகு சேர்க்கும் வகையில் 18 அங்குல அலாய் வீல்கள் இடம் பெற்றுள்ளன. குரோம் பூச்சு கொண்ட விண்டோ லைன்கள், டெயில் கேட்டில் ‘பில்ட் யுவர் டிரீம்’ லோகோவுக்கு பதிலாக ‘பிஒய்டி’ எழுத்துக்கள், உட்புறம் 15.6 அங்குலம் கொண்ட சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இன்போடெயின்மென்ட் சிஸ்டம், புளூ பிளாக் தீம், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், லெவல் 2 அடாஸ், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, பனோரமிக் சன்ரூப் என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் 60.48 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் 521 கி.மீ தூரம் வரை செல்லும். இந்த பேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் விரைவில் சந்தைப்படுத்தப்படும் என நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Related posts

ஈரோட்டில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் மதுபோதையில் தவறாக நடந்துகொண்ட அரசு ஊழியர் கைது..!!

பெண் போலீசார் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி..!!

வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் குறையும்: பிரதீப் ஜான்