ஸ்பீடு அல்ட்ரா 7

சீனாவில் ஸ்மார்ட் போன் உற்பத்தியில் 5வது இடத்தை பிடித்துள்ள ஷாவ்மி நிறுவனம், வாகனச் சந்தையிலும் இறங்கியுள்ளது. இந்த நிறுவனம் ஸ்பீடு அல்ட்ரா 7 (எஸ்யு7 ) என்ற எலக்ட்ரிக் காரை உருவாக்கியுள்ளது. இந்தக் காரை இந்த மாதம் 28ம் தேதி சீனா முழுவதும் 29 நகரங்களில் சந்தைப்படுத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளிலும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மவுசு உள்ளதால் சீனாவில் அறிமுகம் செய்த பிறகு, பிற நாடுகளிலும் சந்தைப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.ஷாவ்மி நிறுவனம் மேற்கண்ட எலக்ட்ரிக் காரை சந்தைப்படுத்த உள்ளது தொடர்பான அறிவிப்பை கடந்த டிசம்பரில் வெளியிட்டது. அப்போது, எலக்ட்ரிக் கார் உற்பத்தியில் உலகின் டாப் 5 இடங்களை பிடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஷாவ்மி தலைமை செயல் அதிகாரி லீல் ஜுன் தெரிவித்திருந்தார். டெஸ்லா மற்றும் போர்ஷே எலக்ட்ரிக் கார்களை விட அதி வேகமாக செல்லும் திறன் கொண்டதாக ஷாவ்மியின் ஸ்பீடு அல்ட்ரா இருக்கும் என கூறப்படுகிறது.

 

Related posts

விமான நிறுவன ஊழியர்கள் போராட்டத்தால் 8 விமானங்கள் ரத்து; 25 ஊழியர்கள் பணிநீக்கம்.! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அதிரடி

தென் சென்னை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 2 கண்காணிப்பு கேமராக்கள் பழுது

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு