வளையமாதேவியில் என்எல்சி சார்பில் பரவனாறு கால்வாய் வெட்டும் பணி 10வது நாளாக தீவிரம்

சேத்தியாத்தோப்பு: கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிக்காக கடந்த 26ம் தேதி வளையமாதேவி கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் என்எல்சி நிறுவனம் வாய்க்கால் வெட்டும் பணிகளை துவக்கியது. முதல் நாள் 35 பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் 10க்கும் மேற்பட்ட ராட்சத கனரக பொக்லைன் இயந்திரங்களை கொண்டு என்எல்சி நிர்வாகத்தினர் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே கால்வாய் வெட்டும் பணியுடன், கரிவெட்டி கிராமத்திற்கு தார்சாலை அமைக்கும் பணியும் விறுவிறுப்பாக நடந்தது. பல அடி ஆழத்திற்கு ராட்சத இயந்திரங்களைக் கொண்டு பள்ளம் தோண்டிய ஊழியர்கள் அந்த மண்ணை டிப்பர் லாரிகளில் ஏற்றி அனுப்பி வருகின்றனர். இன்று 10வது நாளாக கால்வாய் வெட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related posts

விசாகம், பவுர்ணமி, விடுமுறை தினத்தால் திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் நாளை முதல் குளிக்க அனுமதி!

மகாராஷ்டிராவில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து: 4 பேர் பலி