பிஇ படிக்க 79 ஆயிரம் பேர் விண்ணப்பம்

சென்னை: பிஇ, பிடெக் படிப்புகளில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. இதையடுத்து, நேற்று வரை 79 ஆயிரம் பேர் இணையதளம் மூலம் தங்கள் விவரங்களை பதிவு செய்துள்ளனர் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதனுடன் இணைந்த பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2023-2024ம் கல்வி ஆண்டிற்கான பிஇ, பிடெக் மற்றும் பிஆர்க் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. இந்த படிப்புகளில் சேர விரும்பும் மாணவ-மாணவியர் மே 5ம் தேதி முதல் இணையதளம் மூலம் தங்களை பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அதன் பேரில் முதல் நாளான 5ம் தேதி 8,668 பேர் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தனர். அதில், 1,088 பேர் கட்டணத்தை செலுத்தினர். அதில் 250 பேர் தங்களின் உண்மை சான்றுகளையும் பதிவேற்றம் செய்தனர். இந்நிலையில் நேற்று மாலை வரை 79 ஆயிரத்து 955 பேர் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். அவர்களில் 37,476 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். 13,849 பேர் உண்மை சான்றுகளை பதிவேற்றம் செய்துள்ளனர்.

Related posts

வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைப்பு

செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்