ஆந்திராவில் 1996ம் ஆண்டு பட்டியலின இளைஞர்களை வன்கொடுமை செய்த வழக்கில் ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் வேட்பாளருக்கு 18 மாதம் சிறை தண்டனை

ஆந்திரா: ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் வேட்பாளருக்கு 28 ஆண்டுகளுக்குப் பிறகு 18 மாதம் சிறை தண்டனையை வழங்கி இரண்டரை லட்சம் அபராதமும் விதித்து வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆந்திராவில் 1996ம் ஆண்டு பட்டியலின இளைஞர்களுக்கு மொட்டை அடித்து வன்கொடுமை செய்த வழக்கில், தற்போது சட்டப்பேரவை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக போடியிடும் தோட்ட திருமூர்த்திலு உள்பட 9 பேருக்கு 18 மாத சிறை தண்டனை விதித்து வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

பாதிக்கப்பட்ட 5 பேரில் 2 பேர் இறந்து விட்டனர். 24 சாட்சிகளில் 11 பேர் இறந்து விட்டனர். 28 ஆண்டுகளைக் கடந்த வழக்கில் 6 முறை அரசு வழக்கறிஞர்கள் மாறியுள்ளனர். 148 முறை விசாரணை ஒத்திவைக்கப்பட்டு இறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை தலித் மற்றும் பொது சமூகத்தினர் வரவேற்றுள்ளனர். 28 ஆண்டுகளாக போராடி வந்த தங்களுக்கு நீதிமன்றம் நீதி வழங்கியுள்ளதால் பாதிக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related posts

குடும்ப அட்டைதாரர்களுக்கு துவரம் பருப்பு, பாமாயில் ₹418.55 கோடியில் கொள்முதல்

பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி; தலைமை ஆசிரியர்களுக்கு சீர்மிகு பாராட்டு விழா: சென்னையில் நடக்கிறது

உடற்கல்வி இயக்குனர், போக்குவரத்து கழக உதவி மேலாளர் உள்பட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் 118 காலி பணியிடங்கள்: அடுத்த மாதம் 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்