ஆந்திராவில் பெட்ரோல் பங் எண்ணெய் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற போது கால் தவறி விழுந்து 3 பேர் பலி..!!

அமராவதி: ஆந்திராவில் இன்று அதிகாலை பெட்ரோல் பங்கில் உள்ள எண்ணெய் சேமிப்பு தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற போது கால் தவறி விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அண்ணமையா மாவட்டம் ராயசோட்டி நகரில் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கை 6 மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வது வழக்கம். அதேபோல், இன்று காலை 3 பேர் எண்ணெய் சேமிப்பு கிடங்கை சுத்தம் செய்ய சென்றனர். அதில் ஒருவர் கால் தவறி எண்ணெய் தொட்டிக்குள் விழுந்து விட்டார். அவரை காப்பாற்ற சென்ற மேலும் இருவரும் தொட்டியில் விழுந்தனர்.

மூன்று பேருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை கண்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் பெரும் போராட்டத்திற்கு தொட்டியிலிருந்து மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும், 2 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட ஒருவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மூவரும் உயிரிழந்ததால் சோகம் சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்துள்ள ராயசோட்டி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

போலி சான்றிதழ்களை தடுக்க நடவடிக்கை மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்க புதிய செயலி அறிமுகம்: போக்குவரத்து துறை ஆணையர் தகவல்

புராதன சின்னங்களை பாதுகாப்பது தொல்லியல் துறைகளின் கடமை: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

இணையவழி சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளதால் விளம்பரங்களை ஒளிபரப்பும் நிறுவனம், பிரபலங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை