இந்திய ராணுவத்தில் வேலை : 8/10/ஐடிஐ/பிளஸ் 2 படித்தவர்களுக்கு வாய்ப்பு

ஆட்சேர்ப்பு திட்டத்தின் பெயர்: Agniveer Intake- 2024-25 (Agnipath Scheme).
ஆட்சேர்ப்பு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, திருச்சி.

கல்வித்தகுதி மற்றும் இதர தகுதிகள் விவரம்:

1. Agniveer General Duty (All Arms): குறைந்தபட்சம் 45% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: 17½ முதல் 21 வயதிற்குள் இருக்க வேண்டும்.
உயரம் மற்றும் மார்பளவு: குறைந்தபட்சம் 166 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 77 செ.மீ., அகலம் இருக்க வேண்டும். 5 செ.மீ விரிவடையும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
2. Agniveer Technical (All Arms): இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களை கொண்ட பிளஸ் 2 பாடப்பிரிவில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கீழ்க்கண்ட ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.
டிரேடுகள்: Mechanic Motor Vehicle, Mechanic Diesel, Electronic Mechanical, Technician Power Electronic Systems, Electrician, Fitter, Instrument Mechanic, Draughtsman (All Types), Surveyor, Geo Informatics Assistant, Information and Communication Technology System Maintenance, Information Technology, Mechanic cum Operator Electric Communication System, Vessel Navigator, Mechanical Engineering, Electrical Engineering, Electronics Engineering, Automobile Engineering, Computer Science/Computer Engineering, Instrumentation Technology.
வயது வரம்பு: 17½ முதல் 21 வயதிற்குள் இருக்க வேண்டு்ம். உயரம் மற்றும் மார்பளவு: குறைந்தபட்சம் 165 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 77 செ.மீ., அகலம் இருக்க வேண்டும். 5 செ.மீ., விரிவடையும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
3. Agniveer Technical (All Arms) (Office Assistant/Store Keeper): ஏதாவதொரு பாடப்பிரிவில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 17½ முதல் 21 வயதிற்குள் இருக்க வேண்டும். உயரம் மற்றும் மார்பளவு: குறைந்தபட்சம் 162 செ.மீ உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 77 செ.மீ., அகலம் இருக்க வேண்டும். 5 செ.மீ., விரிவடையும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
4. Agniveer Tradesman (All Arms): 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 17½ முதல் 21 வயதிற்குள் இருக்க வேண்டும். உயரம் மற்றும் மார்பளவு: குறைந்தபட்சம் 166 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 77 செ.மீ., அகலம் இருக்க வேண்டும். 5 செ.மீ., விரிவடையும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கும் உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய உயரத்திற்கேற்ற எடை விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் எழுத்துத்தேர்வு, விண்ணப்பதாரரின் உடற்தகுதி, உடற்திறன் தகுதி, மருத்துவத் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். உடற்திறன் தேர்வில் நடத்தப்படும் போட்டிகள் மற்றும் வெற்றி பெற எடுக்க வேண்டிய மதிப்பெண்கள் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஏப்.22ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும்.

www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.03.2024.

 

Related posts

தனியார் பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

போதைப்பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!