கஞ்சா விற்ற 20 பேர் கைது

சென்னை: சென்னையில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக, குட்கா விற்பவர்களின் கடை உரிமம் ரத்து செய்யப்பட்டு, கைது ெசய்யப்படுகின்றனர். கஞ்சா விற்பனை செய்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, அவர்களது வங்கி கணக்குகள் முடக்கப்படுகிறது.

அதன்படி, சென்னை பெருநகர காவல் எல்லையில் கடந்த மாதம் 30ம் ேததி முதல் 6ம் தேதி வரையிலான 7 நாட்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ததாக தனித்தனியாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கஞ்சா வியாபாரிகள் உட்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20.42 கிலோ கஞ்சா, 25 கிராம் மெத்தம்பெட்டமைன், 42 போதை மாத்திரைகள், 11 செல்போன்கள், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

பிரதமர் மோடியின் தியானம் செய்வது அரசியல் நாடகம்.. தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை!!

அணு ஆயுதத்தை விட ஆபத்தானது பிளாஸ்டிக்

பிரதமர் மோடி தியானம் செய்ய தடை விதிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை