திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை

 

ராசிபுரம், மே 24: ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அத்தனூர், வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதிகளில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கைக்காக படிவம் வழங்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வெண்ணந்தூர் ஒன்றியம், அத்தனூர் பேரூர் மற்றும் வெண்ணந்தூர் பேரூர்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை படிவம் சேகரிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், பேரூர் திமுக செயலாளரும், பேரூராட்சி தலைவருமான ராஜேஷ், அத்தனூர் பேரூர் செயலாளரும், பேரூராட்சி துணைத் தலைவருமான கண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திக், பேரூர் இளைஞரணி அமைப்பாளர்கள் வெண்ணந்தூர் மணிகண்டன், அத்தனூர் சதீஷ்குமார், பேரூர் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வசந்தகுமார், அருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி பொறுப்பாளர் ரவீந்தர், ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்