இலவச முட்டை வண்டி வழங்கல்

 

நாமக்கல், மே 24: நாமக்கல் அருகே வளையப்பட்டியில், என்இசிசி சார்பில் இலவச முட்டை வண்டி வழங்கும் விழா நடைபெற்றது. கோழி முட்டை விற்பனையை அதிகரிக்கும் வகையில், என்இசிசி சார்பில் இலவச முட்டை வண்டிகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் அருகே வளையப்பட்டியில், பயனாளிகளுக்கு முட்டை வண்டி வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் சிங்கராஜ் தலைமை வகித்து, முட்டை வண்டியை வழங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

டாக்டர் எழில் குமார், என்இசிசி மத்திய செயற்குழு உறுப்பினர்கள் வல்சன், பூபதி, நாமக்கல் வட்டார தலைவர் ஆனந்தன் உள்ளிட்ட கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முட்டை நுகர்வை அதிகரிக்கும் நோக்கில், பொதுமக்களுக்கு இலவசமாக முட்டை மற்றும் முட்டை உணவு வகைகள் வழங்கப்பட்டன. முட்டை வண்டியை பெற்றுக்கொண்ட பயனாளி புவனேஸ்வரி, அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்