சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை

நாமக்கல், ஏப்.23: நாமக்கல் நகராட்சியில், பொதுமக்கள் சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை பெற்று கொள்ளலாம் என ஆணையாளர் அறிவித்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் நகராட்சிக்கு 2024-25ம் ஆண்டுக்கு செலுத்தவேண்டிய சொத்துவரியை பொதுமக்கள் வரும் 30ம் தேதிக்குள் செலுத்தினால் அவர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே நகரில் உள்ள பொதுமக்கள் தங்களது சொத்துவரியை உடனடியாக நகராட்சி வரிவசூல் மையங்களில் செலுத்தி பயனடையலாம். அதிகபட்சம் ₹50 ஆயிரம் வரை சொத்துவரிக்கு ஊக்கத்தொகை பெற முடியும். இவ்வாறு நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related posts

டாக்டர்களிடம் ரகளை செய்த வாலிபர் ஊழியர்களை தாக்க முயன்றதால் பரபரப்பு

அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 2 பேர் தப்பி ஓட்டம்: வேலூரில் பரபரப்பு

மாந்தோப்பில் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம் 2வது நாளாக யானைகள் கணக்கெடுப்பு