தடையை மீறி இறைச்சி விற்பனை

சேந்தமங்கலம், ஏப்.23: நாமக்கல் மாவட்டத்தில், மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் இறைச்சி கடைகளை மூட அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், புதுச்சத்திரம் பகுதிகளில் இறைச்சி கடைகள் திறந்து வைத்து, விற்பனை செய்யப்பட்டதாக நாமக்கல் மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு பிரிவுக்கு தகவல் வந்தது. அதன் பேரில், எஸ்ஐ தர்மராஜன் தலைமையிலான அதிகாரிகள், புதுச்சத்திரம் பிள்ளாநல்லூர், குருசாமிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு கோழி இறைச்சி கடைகள், மீன் கடைகள் திறக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் இறைச்சி கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்து, இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்