சமூக நீதி, மனித உரிமைகள் விழிப்புணர்வு வேலூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தில்

வேலூர், ஏப்.29: வேலூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தில் சமூக நீதி, மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.வேலூர் எஸ்பி ராஜேஷ் கண்ணன் உத்தரவின்பேரில் டிஎஸ்பி இருதயராஜ் அறிவுறுத்தலின்பேரில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி வேலூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தில் நடந்தது. இதில் உதவி ஆய்வாளர் சிவக்குமார், உதவி ஆய்வாளர் உதயகுமாரி, புள்ளியல் ஆய்வாளர் அருணா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில், மனித நேயம், ஜாதி இல்லை, என்ற விழிப்புணர்வும் மற்றும் கிரைம் பற்றிய அறிவுரைகளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விழிப்புணர்வு பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் விழிப்புணர் குறித்து எடுத்து கூறினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், விஏஓ, ஊர் பொதுமக்கள் உட்பட 200க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக சமூக நீதிப் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Related posts

பெட்ரோல் பங்க்கில் புகுந்த கார் மோதி பெண் படுகாயம்: சிசிடிவி காட்சிகள் வைரல்

குடியாத்தத்தில் முகமூடி அணிந்து பேராசிரியையிடம் செயின் பறித்த 3 வாலிபர்கள் கைது

10 இடங்களில் நாளை வருங்கால வைப்புநிதி குறைதீர்வு கூட்டம் அதிகாரிகள் தகவல்