திருத்தணி அருகே அடையாளம் தெரியாத சடலம்

திருத்தணி: திருத்தணி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருத்தணி அடுத்து ஆற்காடுக்குப்பம் பைபாஸ் சாலையில், சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக நேற்றுமுன்தினம் அப்பகுதியை பொதுமக்கள் கும்பம் கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவனிடம் தெரிவித்தனர். அவர் இது குறித்து கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இறந்தவர், கருப்பு கலர்சட்டை, நீல கலர் கட்டம் போட்ட லூங்கி அணிந்திருந்தார். போலீசார், இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக இங்கே வந்தார்? போதையில் இறந்து விட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related posts

பணிக்கு தாமதமாக வருவோர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை: அனைத்து துறைகளுக்கும் ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு

இன்ஸ்டாகிராம் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் வீடியோ கால், ரியல் மீட் என்ற பெயரில் அத்துமீறும் இளைய தலைமுறையினர்: காவல் துறை எச்சரிக்கை

ரயில் விபத்தில் இறந்தோருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்