காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளில் புதிய பேருந்து வழித்தடம் : அமைச்சர் துவக்கி வைத்தார்

காரியாபட்டி, ஏப். 17:காரியாபட்டி ஒன்றியம் பனிக்குறிப்பு, நரிக்குடி ஒன்றியம் வரிசையூர் ஆகிய கிராமங்களில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வேலைக்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கு அரசு டவுன்பஸ் வசதியின்றி மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அவர்கள் அனைவரும் பனிக்குறிப்பு கிராமத்திலிருந்து காரியாபட்டிக்கு 5 கி.மீ நடந்து வர வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் திருச்சுழி தொகுதி எம்எல்ஏவும், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசுவிடம் இந்த பிரச்னை குறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புதிய அரசு பேருந்து வழித்தடங்கள் உருவாக்கப்பட்டன. இந்த வழித்தடங்களில் பேருந்து சேவையை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் காரியாபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், பேரூராட்சி சேர்மன் செந்தில், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, திமுக மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் குருசாமி, திமுக. பிரமுகர் சின்னபோஸ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

சாத்தூர் அருகே மழை இல்லாததால் கருகும் உளுந்து செடிகள்

சிவகாசியில் வேலன் காவடி எடுத்து குழந்தைகள் நேர்த்திக்கடன்

வடமாடு மஞ்சு விரட்டு போட்டி