வடமாடு மஞ்சு விரட்டு போட்டி

 

காளையார்கோவில், மே 27: காளையார்கோவில் அருகே முத்தூர் வாணியங்குடி கிராமத்தில் அடைக்கலங் காத்த அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. போட்டியில் புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 15 காளைகளும், ஒரு அணிக்கு 9 பேர் வீதம் 135 வீரர்கள் கலந்து கொண்டனர். காளையை 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் 25 நிமிடத்தில் அடக்க வேண்டும் என நேரம் நிர்ணயிக்கப்பட்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் காளைகளை மாடுபிடி வீரர்கள் போராடி அடக்கினர். போட்டியில் வெற்றி பெற்ற காளை மற்றும் வீரர்களுக்கு பரிசு பொருட்களும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. காளைகள் முட்டியதில் 4 வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியினை நாட்டரசன்கோட்டை, கொல்லங்குடி, காளையார்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்