சிவகாசியில் வேலன் காவடி எடுத்து குழந்தைகள் நேர்த்திக்கடன்

சிவகாசி, மே 27: சிவகாசியில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு ஏராளமான குழந்தைகள் வேலன் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். சிவகாசியில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். சிவகாசி முத்தாலம்மன் கோயிலில் தொடங்கிய வேலன்காவடி முருகன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், திருத்தங்கல் ஐயா நாராயணசாமி கோயில், திருத்தங்கல் முருகன் கோயில் சென்று வழிபாடு செய்தனர்.

ஒவ்வொறு கோயிலில் வீற்றிருக்கும் தெய்வங்களை வணங்கி, பஜனை செய்து வழிபாடு செய்தனர். கந்தவேல் முருகா, கதிர்வேல் முருகா என்று கோஷங்கள் முழங்க குழந்தைகள் காவடி எடுத்து சென்றனர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், “தமிழ் கடவுளான முருகனுக்குச் செய்யப்படும் வேண்டுதல் பிரார்த்தனைகளில் முக்கியமானதாக காவடி எடுத்தல் உள்ளது. சிவகாசியில் கடந்த 11 ஆண்டுகளாக காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்துவருகிறது. சிவகாசியில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சென்று வழிபாடு செய்து வருகிறோம்’’ என்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்