சாத்தூர் அருகே மழை இல்லாததால் கருகும் உளுந்து செடிகள்

சாத்தூர், மே 27: சாத்தூர் பகுதியில் போதிய மழை இல்லாததால் உளுந்து செடிகள் கருகி வருகிறது. சாத்தூர் அருகே உள்ள போத்திரெட்டிபட்டி, வன்னிமடை, தெற்குபட்டி பகுதியில் உள்ள விளை நிலங்களில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோடை காலத்தில் கோடை மழை பெய்யும் என்ற நம்பிகையில் உளுந்து பயிர் செய்துள்ளனர்.

ஆனால் விவசாயிகள் எதிர்பார்த்த அளவு கோடை மழை கிடைக்கவில்லை. சாரல் மழையே அதிகமாக பெய்தது. இதனால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். இந்த நிலையில், விளை நிலங்களில் பயிர் செய்துள்ள உளுந்து செடிகள் பூ பூத்து, காய்கள் வெளிவரும் நிலையில் போதிய அளவுக்கு தண்ணீர் கிடைக்காமல் கருகி வருகிறது. இதனால் விளைச்சல் குறையும் என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்