கந்தர்வக்கோட்டை தெற்கு ஒன்றியத்தில் பொதுமக்களுடன் தேர்தல் கலந்துரையாடல் கூட்டம்

 

கந்தர்வகோட்டை, மார்ச் 29: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தெற்கு ஒன்றியத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து தி.மு.க நிர்வாகிகள், பொதுமக்களிடம் கலந்துரையாடல் கூட்டம் கல்லாக்கோட்டை, நடுப்பட்டி, பல்லவராயன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றது. இதற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் மங்களா கோவில் பரமசிவம் தலைமை வகித்து அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களிடம் முறையாக சென்றடைந்ததா எனக் கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில் நகர செயலாளர் மற்றும் மாவட்ட மீனவர் அணி அமைப்பளர் இராஜா, மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் ஜானகிராமன், மாவட்ட பிரதிநிதி மற்றும் அட்மா சேர்மன் ராஜேந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கலையரசன், ஒன்றிய அவைத்தலைவர் சுப்ரமணியன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் முருகேசன், அப்துல் ரசீது, கோவிந்தராசு, ஒன்றிய கவுன்சிலர் வைரக் கண்ணு செல்வராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் ரெங்கசாமி, சித்ரா, பழனி ராசு, தாமரைசெல்வன், ராஜேந்திரன், முருகேசன் உட்பட கழக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் பரமசிவம், நகர செயலாளர் மற்றும் மாவட்ட மீனவர் அணி அமைப்பளர் ராஜா முன்னிலையில் பகட்டு வான்பட்டி தே.மு.தி.க பிரமுகர் சுப்ரமணியன் மற்றும் 15 பேர் விலகி தி.மு.கவில் இணைந்தார்.

 

Related posts

பெரியகருப்பூர் சாமுண்டீஸ்வரி கோயில் காப்பு கட்டு விழா

முதல்வரின் 3 ஆண்டுகால ஆட்சியில் முத்தான திட்டங்கள்; காலை உணவு திட்டம் பேருதவியாக உள்ளது: குழந்தைகளின் பெற்றோர் பெருமிதம்

அதிக லாபம் ஆசை காட்டி பெண்ணிடம் ₹6.56 லட்சம் மோசடி