முதல்வரின் 3 ஆண்டுகால ஆட்சியில் முத்தான திட்டங்கள்; காலை உணவு திட்டம் பேருதவியாக உள்ளது: குழந்தைகளின் பெற்றோர் பெருமிதம்

திருச்சி, மே 10: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் மூன்று ஆண்டுகால ஆட்சியின் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்களால் பயனடைந்த பயனாளிகள் முதல்வருக்கு தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

விடியல் பயணம் (அனைத்து மகளிருக்கும் கட்டணமில்லா பஸ் பயனைம்):
என் பெயர் மாரிக்கண்ணு. நான் திருச்சி மணிகண்டத்தில் வசித்து வருகிறேன். கூலி வேலை செய்யும் நான் தினமும் பஸ் பயணத்துக்காக ₹40 முதல் ₹50 வரை செலவு செய்ய வேண்டியிருந்தது. தமிழ்நாடு முதல்வரின் விடியல் பயணம் திட்டம் மூலமாக என் பஸ் பயணத்துக்கான செலவு மிச்சாகியுள்ளது. அந்த தொகையை கொண்டு குடும்பத்தின் மற்ற தேவைகளை சமாளிக்க முடிகிறது. பெண்கள் நலனை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை அறிவித்த முதல்வருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வரின் உலகம் போற்றும் காலை உணவுத்திட்டம்:
மாணவி முகிதா வர்ஷா: பழங்குடியின மக்களாகிய நாங்கள் துறையூர் ஊராட்சி ஒன்றியம், பச்சைமலையிலுள்ள தோனூரில் வசிக்கிறோம். எங்களுக்கு ஒரு மகன். ஒரு மகள் உள்ளனர். எங்களது மகன் தர்னீஷ் ஐந்தாம் வகுப்பும், மகள் ஜனனி ஒன்றாம் வகுப்பும் கோவிந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து வருகின்றனர். முதல்வரின் காலை உணவுத்திட்டம் எங்கள் குழந்தைகளுக்கு பேருதவியாக உள்ளது. இந்த சிறப்பான காலை உணவுத் திட்டத்தை வழங்கிய முதல்வருக்கு எங்கள் சார்பாகவும், பச்ைசமலை வாழ் பழங்குடியின மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயனடைந்த மாணவர்கள்:
நான் திருச்சியிலுள்ள தனியார் கல்லுாரி ஒன்றில் படித்து வருகிறேன். நடப்பு கல்வியாண்டில் (2023-2034) நான் முதல்வன் திட்டத்தின் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு மாதமும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் எனக்கு பயிற்சி அளித்தனர். இக்கல்வியாண்டில் தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நான் 12ம் வகுப்பு கணினி அறிவியல் பிரிவில் 600க்கு 525 மதிப்பெண் பெற்றுள்ளேன். (பள்ளியில் முதல் மதிப்பெண்). திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்குபெற்று ஆலோசகர்களின் வழிகாட்டுதல்களின் மூலம் BE (AI) பொறியியல் பட்டப்படிப்பினை தேர்வு செய்துள்ளேன். இதற்கு காரணமான முதல்வருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுமைப்பெண் திட்டம்:
என் பெயர் சங்கரி. என் தந்தை ராமச்சந்திரன். நான் புத்தனாம்பட்டியிலுள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை கணிதவியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். மிக ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த நான், என் செலவுகளுக்கு மற்றவரை எதிர்பார்க்கும் நிலை இருந்தது. ஆனால் தற்போது தமிழ்நாடு முதல்வரின் “புதுமைப் பெண்” திட்டத்தால் மாதந்தோறும் ₹1000 உதவித்தொகை கிடைக்கிறது. என் செலவுகளுக்காக மற்றவர்களை எதிர்பார்க்கும் நிலை மாறியுள்ளது. முதல்வருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்:
என் பெயர் மாணிக்கம்மாள் திருச்சி கருமண்டபத்தில் வசித்து வருகிறேன். நானும் என் கணவரும் தட்டு வண்டியில் கடை வைத்து சீசனுக்கு தகுந்தாற்போன்று வியாபாரம் செய்வோம். அதில் கிடைக்கும் வருவாய் எங்களுக்கு போதாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்தோம். தமிழ்நாடு முதல்வரின் ஏழை பெண்களின் கண்ணீர் துடைக்கும் வகையிலான கலைஞர் மகளிர் உரிமை திட்டம் வாயிலாக மாதாந்தோறும் எனக்கு ₹1000 பணம் வருகிறது. இது எங்களை சிரமத்தில் இருந்து விடுவித்துள்ளது. இந்த சிறந்த திட்டத்தை அறிவித்த முதல்வருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்களைத் தேடி மருத்துவம்:
என் பெயர் லட்சுமி. நான் மண்ணச்சநல்லூர் எஸ்.கண்ணனுாரில் வசித்து வரும் எனக்கு 48 வயதாகிறது. நீண்ட நாட்களாக சர்க்கரை நோயால் அவதியுற்று வந்தேன். இதற்காக சமயபுரம் மற்றும் மண்ணச்சநல்லுாரில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மாத்திரைகள் வாங்கி வரவேண்டி இருந்தது. இனிமேல் நீங்கள் மருத்துவமனைக்கு சென்று மாத்திரைகள் வாங்க தேவையில்லை. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் மாத்திரைகள் உங்கள் வீட்டுக்கே வரும் என ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூறினர். அவர்கள் கூறியதை போன்றே மருத்துவத்துடன் தேவையான மாத்திரைகள் என் வீடு தேடி வருகிறது. இந்த மகத்தான திட்டத்தை செயல்படுத்திய முதல்வருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

‘இன்னுயிர் காப்போம்’- நம்மைக்காக்கும் 48” திட்டம்:
நான் மணப்பாறை சொக்கலிங்கபுரத்தில் வசித்து வருகிறேன். என் நண்பருடன் பக்கத்து கிராமத்தில் நடந்த திருவிழாவுக்கு சென்றுவிட்டு டூவீலரில் திரும்பும் வழியில் விபத்தில் சிக்கி காயமடைந்தேன். மிக ஆபத்தான நிலையில் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எனக்கு முதல்வரின் இன்னுயிரை காப்போம்-நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் டாக்டர்கள் அறுவை சிகிச்சை அளித்து, உயர் சிகிச்சை வழங்கினர். இதனால் ஆபத்தான நிலையில் இருந்த நான் உயிர் பிழைத்தேன். என்னை போன்ற ஏழை எளியவர்களுக்கு இந்த திட்டத்தை வழங்கிய முதல்வருக்கு உளமாற என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்