மாஜி பிசிசிஐ தலைவரான கங்குலிக்கு ‘இசட்’ பாதுகாப்பு

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. இதுவரை கங்குலிக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வழங்கப்பட்டு வந்த ‘ஒய்’ பிரிவு பாதுகாப்புக்கான கால அவகாசம் முடிவுக்கு வந்த நிலையில், கங்குலிக்கான பாதுகாப்பை ‘இசட்’ பிரிவுக்கு உயர்த்த மேற்குவங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகராக இருக்கும் கங்குலிக்கு, இனிமேல் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பின்படி 8 முதல் 10 போலீசார் பாதுகாப்பு அளிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பாத்திரத்தை மூடாமல் சமைப்பது ஊட்டச்சத்து இழப்பை அதிகரிக்கும்: ஐசிஎம்ஆர் ஆய்வு தகவல்

மாணவர்களுக்கு, சமூகநீதிக்கு, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்: ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இன்று இயக்கம்: நிர்வாகம் அறிவிப்பு