தஞ்சையில் இளம்பெண் ஆணவக்கொலை: மேலும் 3 பேர் சிக்கினர்


ஒரத்தநாடு: ஒரத்தநாடு அருகே இளம் பெண்ணை ஆணவ படுகொலை செய்த வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள நெய்வவிடுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஐஸ்வர்யா (19), பூவாளூரை சேர்ந்த பாஸ்கர் மகன் நவீனை (19) கடந்த டிச.31ம் தேதி நண்பர்கள் முன்னிலையில் காதல் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வீரப்பாண்டி பகுதியில் தனியாக வீடு எடுத்து 2 பேரும் தங்கினர். இவர்களின் திருமண வீடியோ வாட்ஸ் அப்பில் பரவிய நிலையில், பெருமாள் பல்லடம் போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து, கடந்த 2ம் தேதி பல்லடம் போலீசார், ஐஸ்வர்யாவை அவரது தந்தையுடன் அனுப்பி வைத்தனர். பின்னர், கடந்த 3ம் தேதி ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் எரித்து விட்டதாக நவீன் வாட்டாடத்திக்கோட்டை போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாள், ரோஜா, ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்த ஐஸ்வர்யாவின் மாமன்கள் திருச்செல்வம் (39), முருகேசன் (34), அண்ணன் சின்னராஜ் (30) ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இக்கொலையில் தொடர்புடைய ஐஸ்வர்யாவின் பெரியப்பா முறையான ரங்கராஜ் (56), சுப்பிரமணியன் (56) மற்றும் அண்ணன் முறை கொண்ட பிரபு (36) ஆகியோரை நேற்று போலீசார் கைது திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related posts

ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு: ப.சிதம்பரம் விமர்சனம்

டி20 உலகக்கோப்பை லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து