இளம்பெண்ணுக்கு லவ் டார்ச்சர்: வாலிபர் சிறையில் அடைப்பு

அண்ணாநகர்: அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண், அம்பத்தூரில் உள்ள கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரும், அம்பத்தூரை சேர்ந்த சூர்யா (24) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், சூர்யாவின் நடவடிக்கை பிடிக்காமல் அவருடன் பேசுவதை இளம்பெண் தவிர்த்து வந்துள்ளார். இதையடுத்து சூர்யா தினமும் இளம்பெண்ணை பின்தொடர்ந்து சென்று காதலிக்குமாறு வற்புறுத்தினார்.

நேற்று முன்தினம் இளம்பெண் வீட்டிற்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனை தட்டிக்கேட்ட இளம்பெண்ணின் அண்ணனை சரமாரியாக தாக்கியுள்ளார். புகாரின்பேரில், போலீசார் சூர்யாவை கைது செய்து விசாரித்தனர். அதில், சூர்யா மீது அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சூர்யாவை கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

கன்னியாகுமரிக்கு பிரதமர் வரும் சூழலில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுப்பு..!!

ஜம்மு – பூஞ்ச் நெடுஞ்சாலையில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பயணிகள் பலி

இரவு 7 மணிக்குள் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்