மஞ்சள் எச்சரிக்கை..! தமிழ்நாட்டில் மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு அதிகபட்ச வெப்பம் பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக அதிக வெப்பம் பதிவாகி வருகிறது என்பதும் நேற்று கூட 15 மாவட்டங்களில் உச்சகட்ட வெப்பம் பதிவானதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சற்று முன் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு அடுத்த ஐந்து நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி மே இரண்டாம் தேதி முதல் நான்காம் தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா, பீகார், மேற்கு வங்கத்தில் அதிக வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது; அண்டை மாநிலங்களான கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மே-17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

₹60 லட்சம் மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல்: 2 பேர் அதிரடி கைது

இன்ஸ்பெக்டருடன் உல்லாசம் பெண் எஸ்ஐ அதிரடி டிரான்ஸ்பர்