அழகர்கோயிலில் வருடாபிஷேகம்

 

சாயல்குடி,ஏப்.25: கடலாடி அருகே கிடாக்குளம் அழகர் கோயில் 14ம் ஆண்டு வருடாபிஷேகம் நடந்தது. கடலாடி அருகே கிடாக்குளம்கொட்டை கிராமத்திலுள்ள அழகர் ராமலிங்கம் சாமி சேதுகோடங்கி 14ம் ஆண்டு கோயில் வருடாபிஷேகம் அறக்காவலர் சேதுபதி தலைமையில் நடந்தது. விக்கினேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி, நவகிரஹ, மிருத்தஞ்சன, மஹா பூர்ணஹீதி உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தது. வேத பாராயணம், ஸ்பரிஷா ஹீதி, திரவியஹீதி, பூர்ணஹீதி, தீபாராதனை யாத்ராதானம் நடத்தப்பட்டு மூலவரான ராமலிங்கசாமி, சேதுகோடாங்கி விக்கிரங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. பிறகு மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. 100 கிடாய்கள் வெட்டப்பட்டு பொதுமக்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது.

Related posts

பக்ரீத் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர் திரளாக பங்கேற்பு

காங்கயத்தில் அரசு பேருந்து-கார் மோதல்

கேரளாவிலிருந்து பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு அன்னாசி பழம் வரத்து அதிகரிப்பு