மானாமதுரையில் உலக பூமி தினம் கொண்டாட்டம்

 

மானாமதுரை, ஏப்.25: மானாமதுரையில் உலக பூமி தினம் நகராட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. மானாமதுரை நகராட்சியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு நகராட்சிக்குட்பட்ட செட்டிகுளத்தில் உள்ள நீர்நிலைகளில் மரக்கன்றுகள் நடும் பணியை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமை வகித்து துவக்கி வைத்தார். நகராட்சி துணை தலைவர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர் லதாமணி வரவேற்றார். மரக்கன்றுகளை நடுவோம், மழை பெறுவோம், நமது பூமியை செழிப்புடன் வைத்துக் கொள்வோம். என் குப்பை என் பொறுப்பு என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

செட்டிகுளத்தில் தூய்மை பணியாளர்கள் மூலம் வேப்ப மரம், புங்கமரம் உள்ளிட்ட நிழல் தரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. மாணவர்கள், இளைஞர்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சுகாதார ஆய்வாளர் பாண்டிச்செல்வம், தூய்மை பணி மேற்பார்வையாளர் கார்த்திக், தூய்மை இந்தியா திட்டத்தின் மேற்பார்வையாளர் காயத்ரி மற்றும் வார்டு கவுன்சிலர்களும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

அபார வளர்ச்சியால் விரிவடையும் மாநகராட்சி புதிதாக 50 ஊராட்சிகளை இணைத்து 250 வார்டுகளாக அதிகரிக்க திட்டம்: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கமிட்டி அமைப்பு

இன்று மற்றும் நாளை இரவு கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி வீட்டில் அடைக்கப்பட்ட 18 நாய்கள் மீட்பு:  உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு  விலங்குகள் நலவாரியம் நடவடிக்கை