தடையை மீறி யாத்திரை அரியானாவில் உச்சக்கட்ட பாதுகாப்பு: 24 கம்பெனி துணைராணுவப்படை, 2000 போலீசார் குவிப்பு

நூஹ்: அரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் பேரணியில் கடந்த ஜூலை 31ம் தேதி பேரணி நடத்தினர் இந்த பேரணி மீது ஒரு பிரிவினர் நடத்திய தாக்குதல் கலவரமாக வெடித்தது. இந்த வகுப்புவாத மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 280 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரியானாவில் இன்று ‘சர்வ் ஜாதிய இந்து மகாபஞ்சாயத்து’ அமைப்பு சார்பில் ஷோபா யாத்திரைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த யாத்திரைக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து, 144 தடை உத்தரவும் பிறப்பித்து உள்ளது. ஆனால் தடையை மீறி இன்று ஷோபா யாத்திரை நடைபெற உள்ளதால் மாநிலம் முழுவதும் இணையதளம், கைப்பேசி சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் நூஹ் உள்பட மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளில் 24 கம்பெனி துணை ராணுவப்படையினர் மற்றும் 1,900 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நூஹ் மாவட்டத்துக்குள் செல்லும் அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளன.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்: பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்

முதலில் வருவோருக்கு முதலில் சேவை என்ற நடைமுறையில் நேரடி, உட்பிரிவு பட்டாவுக்கு ஒரே வரிசை எண் என்பது தவறு: வருவாய்த்துறை விளக்கம்

காஷ்மீரில் தீவிரவாதி சுட்டு கொலை