மல்யுத்த வீராங்கனைகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு பிரேமலதா கண்டனம்

அவனியாபுரம்:தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் விவகாரத்திற்காக நீதி கேட்டு தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கான நியாயத்தை ஒன்றிய அரசு வழங்கவில்லை. அது கண்டிக்கத்தக்கது. இந்தியாவிற்காக விளையாடும் வீராங்கனைகளுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

மேகதாது அணை கட்டுவதை தமிழர்கள் உறுதியாக அனுமதிக்க மாட்டார்கள். இந்தத்துறைக்கான தமிழக அமைச்சரும், அணை வராது என்று கூறியுள்ளார். அதை மீறி அணை கட்டும் முயற்சியை தொடங்கினால் இரு மாநிலங்களுக்கிடையே பிரச்னை ஏற்படும். இப்பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை மையம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 4வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ: வனப்பகுதியில் 500 ஏக்கரில் மரங்கள் நாசம்

சத்தீஸ்கர் மாநிலம் பீமதாரா பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதியதில் 9 பேர் உயிரிழப்பு