தினமும் கொட்டி தீர்க்கும் மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர வாய்ப்பு

 

ஊட்டி, ஜூன் 2: ஊட்டியில் தினமும் கொட்டி தீர்க்கும் மழையால், குளங்கள், குட்டைகள், அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டு தோறும் மே மாதம் இறுதி வாரத்தில் துவங்கி நவம்பர் மாதம் வரை ஊட்டியில் சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை பெய்வது வழக்கம். கடந்த ஆண்டு நீலகிரியில் தென்மேற்கு பருவமழை குறித்த சமயத்தில் துவங்கி பல மாதங்கள் கொட்டி தீர்த்தது. இதனால், அனைத்து அணைகளும் நிரம்பி வழிந்தன.

அதேபோல, நீரோடைகள், ஆறுகள், குளம் மற்றும் குட்டைகளிலும் தண்ணீர் அதிகளவு காணப்பட்டது. விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைத்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாள் தோறும் மழை பெய்து வருகிறது.

Related posts

பெருமாள் கோயிலில் வசந்த உற்சவ விழா

கஞ்சா விற்றவர் கைது 3 கிலோ பறிமுதல்

அணையில் தவறி விழுந்த வாலிபர் பலி