வீராங்கனைகள் போராட்ட விவகாரம்; பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்: ஒன்றிய அமைச்சர் அழைப்பு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பாஜக எம்பி மீது போக்சோ உள்பட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. டெல்லி போலீசார் இதுவரை 2 முறை எம்பியின் உறவினர்கள், வீட்டில் இருப்பவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.

பாஜக எம்பியை கைது செய்யக்கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பேச்சுவார்த்தைக்கு வருமாறு அவர்களுக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் வெளியிட்ட பதிவில், ‘பிரச்னைகள் தொடர்பாக மல்யுத்த வீரர், வீராங்கனைகளுடன் பேச்ச்சுவார்த்தை நடத்த ஒன்றிய அரசு தயாராக உள்ளது. மல்யுத்த வீரர், வீராங்கனைகள், பேச்சுவார்த்தைக்கு வருமாறு மீண்டும் அழைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Related posts

வீரபாண்டி சித்திரைத் திருவிழாவிற்காக கடைகள் அமைக்கும் பணி விறுவிறு

பெரம்பலூரில் விஜய மெட்டல் மார்ட் நிறுவன கிடங்கில் தீ விபத்து

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (06-05-2024) காலை 9.30 மணிக்கு வெளியாகும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு