மகளிர் காவல்துறை தொடங்கப்பட்டு பொன்விழா ஆண்டு கொண்டாடப்படுவதை ஒட்டி பாய்மர போட்டியை தொடக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி..!!

சென்னை: மகளிர் காவல்துறை தொடங்கப்பட்டு பொன்விழா ஆண்டு கொண்டாடப்படுவதை ஒட்டி பாய்மர படகுப்போட்டி நடைபெற்றது. 1973ம் ஆண்டு கலைஞர் ஆட்சியின் போது தமிழ்நாடு காவல்துறையில் முதன் முதலாக பெண் காவலர்கள் சேர்க்கப்பட்டனர். இதன் பொன்விழா ஆண்டு தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை துறைமுகத்திலிருந்து கோடியக்கரை வரையிலான பாய்மர பயணம் தொடங்கியது.

துறைமுகத்தில் தொடங்கி பழவேற்காடு வழியாக கோடியக்கரை சென்று மீண்டும் துறைமுகத்திற்கு திரும்பும் வகையில் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பயணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாய்மரப்படகு பயணத்தை துறைமுகத்தில் இருந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பாலநாகதேவி, மகேஸ்வரி, பாவானீஸ்வரி, கயல்விழி ஆகிய 4 ஐ.பி.எஸ் அதிகாரிகள் தலைமையில் 4 பாய்மர படகுகளில் 30 பெண் காவலர்கள் பயணம் செய்தனர். இன்று தொடங்கிய இந்த பயணம் வரும் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடக்க விழாவில் காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related posts

தீப்பெட்டியை எரிக்கும் சீன லைட்டர்கள்

கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை -நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நீட்டிப்பு

களைகட்ட போகும் கோடை சீசன் ஊட்டியில் மலர் கண்காட்சி மே 10ம் தேதி தொடக்கம்