கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் மேலும் ஒரு பெண் சாவு: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி களமசேரியில் கடந்த மாதம் 29ம் தேதி நடந்த யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ அமைப்பின் ஜெப மாநாட்டில் நடந்த குண்டு வெடிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் பலியானார். 51 பேர் காயமடைந்து எர்ணாகுளத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி லிபினா என்ற 12 வயது சிறுமி உள்பட மூன்று பெண்கள் பலியானார்கள். இதனால் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்தது. இந்தநிலையில் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி லிபினாவின் தாய் ரீனா 2 நாட்களுக்கு முன் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். அதைத்தொடர்ந்து களமசேரி குண்டு வெடிப்பில் பணியானவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் தற்போது போலீஸ் காவலில் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

Related posts

நின்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 15 பேர் பலி: 60 பேர் படுகாயம்; மேற்கு வங்கத்தில் பயங்கரம்

ரேபரேலி எம்பியாக நீடிக்க முடிவு வயநாடு எம்.பி பதவி ராகுல் ராஜினாமா: இடைத் தேர்தலில் பிரியங்கா போட்டி

நான் முதல்வன் திட்டத்தில் லண்டனில் பயிற்சி முடிந்து 25 மாணவர்கள் திரும்பினர்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து