உளவு பலூன் மூலம் சீனா சேகரித்தது என்ன?.. அமெரிக்க ராணுவம் ஆய்வு

வாஷிங்டன்: சீனாவின் உளவு பலூன் ஒன்று கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் ராணுவ தளங்களை சுற்றி வந்து ரகசியமாக கண்காணித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, பிப்ரவரி 5ம் தேதி அமெரிக்க ராணுவம் அதனை சுட்டு வீழ்த்தியது. இந்நிலையில், எலக்ட்ரானிக் அலைவரிசை மூலம் அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் தளவாடங்கள் குறித்த ரகசியங்களை சீன உளவு பலூன் வேவு பார்த்து உடனடியாக சீனாவுக்கு அனுப்பி வைத்ததாக நேற்று முன்தினம் பென்டகன் குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில், எந்த மாதிரியான ராணுவ ரகசியங்களை உளவு பலூன் சீனாவுக்கு அனுப்பி வைத்தது என்பது குறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் ஆய்வு செய்து வருவதாக பென்டகனின் ஊடகப்பிரிவு துணை தலைவர் சப்ரினா சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

Related posts

நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து: மே 13 முதல் துவக்கம்

தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது

ஒரே இடத்தில் வாக்கு சேகரிக்க சென்றபோது ஒய்எஸ்ஆர் காங்.-ஜனசேனா கட்சியினர் நடுரோட்டில் ஆக்ரோஷ மோதல்: திருப்பதியில் பரபரப்பு