மேற்குவங்க மாநிலத்தில் மின்னல் தாக்கி 14 பேர் பலி

ஹவுரா: மேற்குவங்க மாநிலம் பாஸ்சிம் மிட்னாபூர், ஹவுரா, கொல்கத்தா, வடக்கு 24 பர்கானாஸ், புர்பா பர்தாமான், முர்ஷிதாபாத் உட்பட தெற்கு மேற்குவங்க மாவட்டங்களில் விவசாயிகள் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென இடியுடன் கனத்த மழை பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால், வயல்வெளியில் சிக்கிய விவசாயிகள் பாதுகாப்பான இடங்களுக்கு திரும்பமுடியவில்லை.

அலிபூரில் மட்டும் ஒரு நிமிடத்திற்கு 79 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. தொடர்ச்சியாக மின்னல் தாக்கியதால் மேற்கண்டங்களை சேர்ந்த 14 விவசாயிகள் பலியாகியதாக பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் கூறினர். அப்பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்