மேற்குவங்கத்தில் பழங்குடியின பெண் பலாத்கார கொலை விவகாரம்: 144 தடை உத்தரவை மீறி காவல் நிலையத்திற்கு தீ வைப்பு; 20 பேர் கைது

கலியாகஞ்ச்: பழங்குடியின பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் 144 தடை உத்தரவை மீறி காவல் நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டதால், மேற்குவங்கத்தில் பதற்றம் நிலவுகிறது. மேற்குவங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டம் கலியாகஞ்ச் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பழங்குடியின சிறுமியை கடந்த வாரம் பாலியல் பலாத்காரம் கும்பல், அவரை கொன்று கால்வாயில் உடலை வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போலீசாரின் நடவடிக்கையில் திருப்தியடையாத பாதிக்கப்பட்ட மக்கள், கலியாகஞ்ச் காவல் நிலையம் முன் போராட்டம் நடத்தினர்.

அங்கிருந்த ஒரு கும்பல் காவல் நிலையத்திற்கு தீ வைத்தது. தீ மளமளவென பற்றி எரிந்ததால், போலீஸ் ஸ்டேஷன் கட்டிடம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் எரிந்து சாம்பலாகியது. இந்த சம்பவத்தால் இரண்டு போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். முன்னதாக காவல் நிலையம் முன்பு குவிந்திருந்த கும்பலை அப்புறப்படுத்த போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியும் பலனளிக்கவில்லை. நீண்ட போராட்டத்திற்கு பின்னரே நிலைமை கட்டுக்குள் வந்தது.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில்:
கால்வாயில் கிடந்த இளம்பெண்ணை பிரேத பரிசோதனை செய்ததில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருவதால், கலியாகஞ்ச் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், காவல் நிலையத்திற்குள் புகுந்து தீவைப்பு சம்பவத்தை நடத்தி உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 20க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளோம். பதற்றம் அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தி உள்ளோம் என்றனர்.

Related posts

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு