திருமணத்துக்கு பெண் கிடைக்க வேண்டி பாதயாத்திரை: மாதேஸ்வரன் கோயிலுக்கு கர்நாடக இளைஞர்கள் நடைபயணம்

பெங்களூரு: திருமணத்துக்கு பெண் கிடைக்க வேண்டி கர்நாடகாவை சேர்ந்த இளைஞர்கள் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர். கர்நாடக மாநிலம் கோடஹள்ளி கிராமத்தை சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயம் செய்வதால் அவர்களுக்கு பெண் கொடுக்க சிலர் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி கோடஹள்ளி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் 160 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாதேஸ்வரன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்று வழிபாடு செய்தனர். மேலும், போதிய மழை பெய்து விவசாயம் செழிக்கவும் வேண்டியுள்ளனர். மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பெண் கிடைக்க வேண்டி கடந்த சில மாதங்களுக்கு முன் மாதேஸ்வரன் கோயிலுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசு பள்ளிகளில் 6890 ஹைடெக் லேப் நிர்வாகிகள் நியமனம்; பணிகளை வரையறை செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அதிமுக தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் ஒன்றிணைந்து செயல்பட சசிகலா அழைப்பு

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்வரலாற்று வெற்றிக்காக முழு பலத்துடன் களம் இறங்கிய திமுக: தோல்வி பயத்தில் ஒதுங்கியதா அதிமுக? பாஜவுக்கு பலமில்லாததால் பாமக போட்டி