மணிப்பூரில் போலீஸ் சோதனையில் ஆயுதங்கள், வெடிமருந்து சிக்கின

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி பழங்குடிகள், மெய்டீ சமூகத்தினரிடையே ஏற்பட்ட பயங்கர கலவரமாக வெடித்தது. பல மாதங்களாக நடந்து வந்த கலவரத்தில் 180க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள 2 கிராமங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஏராளமான ஆயுதங்கள்,வெடிமருந்துகள் சிக்கின.

ஹாலென்ஜங்க் என்ற கிராமத்தில் நடத்திய சோதனையில்,4 துப்பாக்கிகள்,ஒரு மார்ட்டர் ரக பீரங்கி, வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.மோல்ஜங் என்ற கிராமத்தில் 10 துப்பாக்கிகள், 8 ஜெலட்டின் குச்சிகள்,வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. இம்பால் மேற்கில் கைது செய்யப்பட்ட 3 ேபரிடம் இருந்து 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்